சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தபோதும், இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தவில்லை: பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 85 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. எனவே, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச சந்தையுடன் தொடர்புடையதாகவே, அமைந்துள்ளன. கச்சா எண்ணெய் கொள்முதல் விலை, பறிமாற்ற விலை, இறக்குமதி செலவுகள், உள்நாட்டு போக்குவரத்து செலவு, சுத்திகரிப்பு செலவுகள், விற்பனையாளர்கள் பங்கு, மத்திய வரிகள், மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பல அம்சங்களைச் சார்ந்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அமைகின்றன.

2020ம் ஆண்டு நவம்பர் 2022ம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில், கச்சா எண்ணெய் விலை 150 சதவீதம் வரை உயர்ந்தது. எனினும், இந்தியாவில் பெட்ரோல் விலை இந்த காலகட்டத்தில் 18.95 சதவீதமும், டீசல் விலை 26.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளன. அமெரிக்காவில்,2020 அக்டோபர் முதல் 2022 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை 98.2 சதவீதமும், டீசல் விலை 144.6 சதவீதமும் உயர்ந்துள்ளது. கனடாவில் இதே காலகட்டத்தில் பெட்ரோல் விலை 80.6 சதவீதமும், டீசல் விலை 138. 4சதவீதமும் உயர்ந்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சாக எண்ணெய் விலை உயர்ந்தபோதும், ஏப்ரல் மாதம் 6ம் தேதிக்குப் பிறகு நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தவில்லை. இதனால்  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டில் இழப்பை சந்தித்துள்ளன.

நாட்டின் சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. சவுதி அரேபியாவின் ஒப்பந்த விலையை பொருத்தே, இதன் விலைகள் அமைகின்றன. சமையல் எரிவாயு விலை உயர்ந்தபோதும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாமல், அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு அண்மையில், 22ஆயிரம் கோடி ரூபாயை வழங்க அனுமதித்தது.

இந்த தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி  தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply