விண்வெளித் தொழில்துறையில் உள்ள புதிய நடைமுறைகளில் இஸ்ரோ பணியாளர்கள் திறன் பெறும் வகையில் பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் நடைபெற்று வருகிறது.

விண்வெளி தொழில்துறையில் உள்ள புதிய நடைமுறைகளில் இஸ்ரோ பணியாளர்கள் திறன் பெறும் வகையில் பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் நடைபெற்று வருகிறது.

விண்வெளித் துறையில் தொழில்நுட்பப் பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் (இஸ்ரோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு இஸ்ரோ தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டின் விண்வெளித்துறைக்கு தேவையான புதுமையான நடைமுறைகளின்படி திறன்களை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள்.

பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் 5 நாட்களில் 20 பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள்.   

திவாஹர்

Leave a Reply