மலேசியா நாட்டில், சிலாங்கூர் மாகாணத்தில், பத்தாங்காலி நகரத்தில் Father’s Organic Farm- பாதர்ஸ் இயற்கை விவசாயப் பண்ணையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 21 பேர் புதையுண்டனர்; 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்; 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 12 பேரை காணவில்லை.
கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50 கிமீ மற்றும் கெண்டிங்கு மேட்டு நிலத்திற்கு மேற்கே சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள திட்டிவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள சிலாங்கூர், பத்தாங்காலிக்கு சற்று வெளியே இந்த Father’s Organic Farm- பாதர்ஸ் இயற்கை விவசாயப் பண்ணைஅமைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் இயற்கை விவசாய நடவடிக்கைகளை தொடங்க இந்த பண்ணை நிர்வாகத்தின் சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 2020 ஆம் ஆண்டு முதல் உரிமம் இல்லாமல் பண்ணையில் முகாம் நடத்தப்பட்டு வந்ததுள்ளது.
பத்தாங்கலி கிள்ளான் பள்ளத்தாக்குக்கு அருகாமையில் ஆறு, மலை சரிவுகள், நீர்வீழ்ச்சிகள் இருப்பதால், பள்ளி விடுமுறை காலத்துடன் இணைந்து ஒரு பிரபலமான பொழுதுபோக்கு இடமாக இந்த பண்ணை ஈர்த்து வந்தது.
மலை உச்சி மண்டலம் A, பண்னைப் பார்வை மண்டலம் B, மற்றும் ஆற்றங்கரை மண்டலம் C என்று மூன்று பிரிவுவுகளாக இந்த பண்ணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி மாலை நிலவரப்படி 94 பேர் இப்பகுதியில் இருந்துள்ளனர். இதில் நிலச்சரிவு ஏற்பட்ட இரவில், 81 பேர் (அதாவது 51 பெரியவர்கள், 30 குழந்தைகள்) விவசாயப் பண்ணையின் முகாமில் தங்குவதற்கு பதிவு செய்யப்பட்டிருந்தனர். முகாமில் இருந்தவர்கள் பெரும்பாலும் குடும்பங்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு துல்லியமான பதிவுகள் வைக்கப்பட்டிருந்தாலும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகாமில் தங்குவதற்கு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை என்ற அச்சமும் இருக்கிறது.
கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு முன் இந்நிலச்சரிவு தொடங்கியுள்ளது. 70 மீட்டர் உயரத்தில் இருந்து 300 மீட்டர் அகலம் கொண்ட பரப்பளவு உள்ளடங்கி 450,000 கனமீட்டர் மண் சரிவு ஏற்பட்டு அப்பகுதி சேதமடைந்துள்ளது.
இந்நிலச்சரிவில் இந்த பண்ணையில் உள்ள மூன்று முகாம்களின் மண்டலமும் நேரடியாகப் பாதித்து கடுமையான சேதம் ஏற்பட்டு உயிர் பலி நடந்துள்ளது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com