சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2023-ஐ கொண்டாட இந்தியா தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் சிறுதானிய வகைகள், பரிமாறப்பட்ட மதிய விருந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இதர தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“2023-ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக நாம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தரமான தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் இதில் பங்கேற்றதைக் கண்டது சிறப்பாக இருந்தது”.
எஸ்.சதிஷ் சர்மா