ஆயுர்வேத மருத்துவத் திட்ட சிறப்பு மையங்களின் நிலை குறித்து ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேச்சு.

ஆயுர்வேத மருத்துவத் திட்ட சிறப்பு மையக் கூறுகளின் கீழ், தகுதியுள்ள தனிப்பட்ட நிறுவனங்கள்/நிறுவனங்களுக்கு அவற்றின் செயல்பாடுகள் மற்றும் வசதிகள் அடிப்படையில் ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத் திட்ட சிறப்பு மையக் கூறுகளின் நோக்கங்கள் பின்வருமாறு: –

i. அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் உள்ள புகழ்பெற்ற ஆயுஷ் மற்றும் அலோபதி நிறுவனங்களில் மேம்பட்ட/சிறப்பு வாய்ந்த ஆயுஷ் மருத்துவ சுகாதாரப்  பிரிவை நிறுவுவதற்கு ஆதரவளிக்க.

ii.    கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆயுஷை மேம்படுத்துவதற்குத் தேவையான பிற துறைகளில் ஆயுஷ் நிபுணர்களின் திறன்களை வலுப்படுத்த, புகழ்பெற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வசதிகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துவதற்கு  ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான திட்டங்களை ஆதரித்தல்.

iii.    நன்கு நிறுவப்பட்ட கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்ட மதிப்புமிக்க நிறுவனங்களுக்கான ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான திட்டங்களை ஆதரிப்பது மற்றும் சிறப்பு மையத்தின் நிலைக்கு உயர  ஆயுஷ் அமைப்புகளுக்காகப் பணியாற்ற விரும்புவது.

ஆயுஷ் மருத்துவத் திட்ட  சிறப்பு மையத்தின் கீழ், ஒரு அமைப்பு/நிறுவனத்திற்கு அதிகபட்சமாக அனுமதிக்கும்  நிதி உதவி என்பது, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 கோடியாகும்.

ஆயுஷ் அமைச்சர்   சர்பானந்த சோனாவால் இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத்  தகவலைத் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply