வளர்ந்து வரும் உலகளாவிய சந்தை தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஜவுளித்துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்ஜோஷி தெரிவித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையின் ஏற்றுமதி குறித்த தகவல் :
ஜவுளி, ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்களின் ஏற்றுமதி 2017-18-ல் 37.55 அமெரிக்க பில்லியன் டாலராகவும், 2022-23-ல் (ஏப்ரல் முதல் அக்டோபர், 2022) 21.15 அமெரிக்க பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது என்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்ஜோஷி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
‘வரும் 2030-ஆம் ஆண்டில் ஜவுளித்துறையின் ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எம். பிரபாகரன்