மருத்துவக்கல்வி தமிழில் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவம் தொடர்பான படிப்புகள் தமிழில் இருந்தால், மாணவர்கள் உயர் ஆராய்ச்சி வரை எளிதாக மேற்கொள்ளலாம் என்று, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ளபல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கூட்டரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, ஆராய்ச்சி படிப்பு முடித்த 41 பேருக்கு பட்டங்களை வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply