நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மேலும் அதிக தொகுதிகளை அடையாளம் கண்டது நிலக்கரி அமைச்சகம்.

நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையாக, நிலக்கரி அமைச்சகம் மேலும் நான்கு நிலக்கரி தொகுப்புகளை அடையாளம் கண்டுள்ளது. வரும் மாதங்களில் மத்திய சுரங்கத் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் 4 முதல் 6 புதிய நிலக்கரி தொகுப்புகளுக்கான புவியியல் அறிக்கையை இறுதி செய்யும். இந்த நிலக்கரி தொகுப்புகள் தனியார் துறைக்கு ஏலத்திற்கு விடப்படும். இதன் மூலம் உள்நாட்டு கச்சா நிலக்கரி விநியோகம் மேலும் அதிகரிக்கும்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 140 மில்லியன் டன் கச்சா நிலக்கரி உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம், கச்சா நிலக்கரி உற்பத்தியை தற்போதுள்ள சுரங்கங்களிலிருந்து 26 மில்லியன் டன் அளவுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 22 மில்லியன் டன் கச்சா நிலக்கரியை உற்பத்தி செய்ய 9 புதிய சுரங்கங்களை நிறுவனம் கண்டறிந்துள்ளது. மேலும் கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி வெட்டப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள 30 சுரங்கங்களிலிருந்து 8 சுரங்கங்களை தனியார் துறைக்கு வழங்கவும், அதன் மூலம் உற்பத்தியை 2 மில்லியன் டன் அளவுக்கு அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply