ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளுக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை மாவட்ட ஆட்சியரும் மற்ற உயர்அதிகாரிகளும் மனதில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். எந்த ஒரு மத்திய அரசு திட்டங்களுக்காகவும், நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த எட்டு வருடங்களில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், தேவையுடைவர்களுக்கு சென்றடைந்ததாக கூறினார்.
எம். பிரபாகரன்