விடுதலை அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அசாமில் மின்சார பெருவிழா ஆர்இசி ஏற்பாடு செய்திருந்தது.

சுதந்திர இந்தியாவின் 75 வதுஆண்டு நிறைவு விழா கொண்டாடும் வகையில், விடுதலை அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அசாமில்  பக்சா மாவட்டத்தின்  அனந்தபூர்கான் மற்றும் அதையொட்டிய கிராமங்களில் மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆர்இசி நிறுவனம் மின்சார பெருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மின்நுகர்வோரின் உரிமைகள், மின்சாரத்தின் பயன்கள், ஊரகப்பகுதிகளில் மின்மயமாக்கல் பணியின் போது, எதிர்கொள்ளும் சாவல்கள் மற்றும் மின்சாரத்தின் மூலம் வாழ்க்கை தரம் எவ்வாறு மேம்படுகிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மின்நுகர்வோரின் உரிமைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தின் பயன்கள் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சி, தெருவோர நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன.

கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர் மேடைக்கு அழைக்கப்பட்டு, மின்சாரம் தங்களது வாழ்க்கையில் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற  அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்இடி பல்புகள் பரிசாக வழங்கப்பட்டன.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply