2023-ம் ஆண்டு ஜனவரி 9-10 ஆகிய தேதிகளில் வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மேகாலயா மாநிலத்தின் கரோ ஹில்ஸ் மாவட்டத்திற்கு மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா பயணம் செய்யவுள்ளார். இந்தப் பகுதிக்கு ஒரு மத்திய அமைச்சர் வருகை தருவது இதுவே முதல்முறை ஆகும்.
2023 ஜனவரி 9-ம் தேதியன்று, காரோ ஹில்ஸின், அம்பட்டியில், மத்திய அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்கு, அமைச்சர் தலைமை தாங்குகிறார்.
2023 ஜனவரி 10-ம் தேதியன்று, பெண்கள், பால் பண்ணையாளர்கள் மற்றும் மீன்பிடி தொழில்முனைவோருக்கான சுய உதவி குழுக்களை மத்திய அமைச்சர் ரூபாலா சந்திக்கிறார். மேலும், எல்லைப் பகுதி மக்களுடன் கலந்துரையாடுவதற்காக வங்கதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள ஹாட் பகுதிக்கும் அமைச்சர் ரூபாலா செல்லவுள்ளார்.
திவாஹர்