தேர்வு குறித்த கலந்துரையாடல் 2023 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்தார்.

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2023 நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கல்வித்துறை இணையமைச்சர்கள் திருமதி அன்னபூர்ண தேவி, டாக்டர் சுபாஷ் சர்கார் ஆகியோருடன் இணைந்து  இன்று ஆய்வு செய்தார்.

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சக செயலாளர் திரு அபூர்வா சந்திரா, கல்வி, தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சகம், பத்திரிகை தகவல் அலுவலகம், என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்விஎஸ், கேந்திரிய வித்யாலயா மற்றும் மைகவ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய திரு பிரதான், தேர்வுக்காலத்தையொட்டி  மாணவ சமுதாயத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாட உள்ளதாக கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply