கயானா அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலியை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி இன்று சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடைபெற்ற கூட்டத்தில் கயானா நாட்டு இயற்கை வளத்துறை அமைச்சர் திரு விக்ரம் பாரத்தை திரு ஹர்தீப் சிங் சந்தித்து பேசிய பின்னர், எரிசக்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல 2 தொழில்நுட்பக் குழுக்களை அமைக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். 2023-ஆம் பிப்ரவரி மாதம் கயானா துணை அதிபர் திரு பாரத் ஜாக்டியோவின் இந்திய பயணத்தின் போது எதிர்கால ஒத்துழைப்புக் குறித்து இறுதி செய்யப்படும்.
திவாஹர்