சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புமுறை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கிய தளம் குறித்த தேசிய பயிலரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நடத்தியது. புதுதில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கில் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் மின்னணு இடையீடுகளில் கவனம் செலுத்தி மூன்று வெளியீடுகள் நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை செயலாளர், நாடு முழுவதும் 1.54 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் செயல்படுவதாகவும் 12 சுகாதார தொகுப்புகளை இலவசமாக இந்த மையங்கள் வழங்குவதோடு, மருந்துகள், பொதுவான புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் பரிசோதனைகள் இங்கு இலவசமாக செய்யப்படுவதாகக் கூறினார். மேலும், சுமார் ஒரு லட்சம் மையங்கள் சஞ்சீவனி தொலைமருத்துவ சேவைகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சேவைகளால் ஏராளமான டிஜிட்டல் தரவுகள் உருவாவதால் அவற்றை பதிவேற்றம் செய்து, மிக கவனமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கிய தளம், சுகாதார மேலாண்மை தரவு அமைப்புமுறை மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகியவற்றை சிறந்த முறையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறிய அவர், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ கணக்கு அட்டைகளை உருவாக்குவதன் வாயிலாக மருத்துவ ஆவணங்கள் தயாரிக்கப்படுவதோடு, இயங்குதன்மை உறுதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
நகர்ப்புற சுகாதார புள்ளியியல் 2021- 22, சுகாதார மேலாண்மை தரவு அமைப்புமுறை 2020-21 மற்றும் 2021-22, மக்கள் தொகை ஆராய்ச்சி மையங்களின் தொகுப்பு குறித்த திறனாய்வு அறிக்கை ஆகிய 3 அறிக்கைகளை திரு ராஜேஷ் பூஷன் வெளியிட்டார்.
திவாஹர்