விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

இந்த சேவை, இந்திய ரயில்வேத் துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது   என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிகளுக்கு உயர்தர வசதிகள் மற்றும் வேகமான, சொகுசான பயணம் அமையும்.

திரு சரத் யாதவ் மறைவு நாட்டின் பொது வாழ்க்கைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திரு சரத் யாதவ் தனது பல தசாப்த கால பொது வாழ்வில், நாட்டில் அவசரநிலைக்கு எதிராக குரல் எழுப்பி, ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினைகளை எழுப்பி, அவர்களின் நலனுக்காக பாடுபட்டார். தனது 50 கால ஆண்டு  பொது வாழ்வில், திரு சரத் தனது கடைசி மூச்சு வரை சோசலிச அடிப்படைக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றார்.

திரு சரத் யாதவ் பல தசாப்தங்களாக பீகார் மற்றும் இந்திய அரசியலில் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினார் என்று திரு அமித் ஷா கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பிறந்த ஸ்ரீ சரத் யாதவ், தனது கடின உழைப்பு மற்றும் கொள்கைகளின்படி வாழ்க்கையை வாழ நிலையான முயற்சிகளை மேற்கொண்டு நாடு முழுவதும் நிரந்தர முத்திரை பதித்துள்ளார்.  “துக்கத்தின் இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஆன்மாவுக்கு இறைவன் தனது  புனித பாதத்தில் இடம் தரட்டும்” என்று திரு ஷா கூறினார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply