75-ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன் வளத்துறை சாகர் பரிக்கிரமா திட்டத்தை தொடங்கியுள்ளது. சாகர் பரிக்கிரமா திட்டம் என்பது கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வழியாக நடத்தப்படுகிறது.
சாகர் பரிக்கிரமாவின் 3-வது கட்டத்திற்கான திட்டமிடுதல் கூட்டம் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய நீர்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடல் மீன் வளத்துறையின் இணைச் செயலாளர் கலந்துகொண்டார். துறைமுகங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சாகர் பரிக்கிராமா பாடலின் மராத்திய வடிவத்தை அமைச்சர் திரு பர்ஷோத் ரூபலா தொடங்கிவைத்தார். இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த காரணமான அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மகாராஷ்டிரா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை தெரிவித்தனர். மேலும் மீனவ சமுதாயத்தினர் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களும் தங்களது கருத்துக்களை விரிவாக தெரிவித்தனர்.
மத்திய அரசு மீனவர்களின் நலுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் மற்றும் கடலோர சமுதாயத்தினரிடையே பரப்புவது சாகர் பரிக்கிரமா நோக்கமாக கொண்டுள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் உணர்வை மீனவர்கள், மீன்பிடி விவசாயிகள் ஆகியோரை இத்திட்டத்தில் சேர்ப்பதும், அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்குவதும் இதன் நோக்கமாகும்.
திவாஹர்