வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாகவே இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவி செய்து அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் இது அமையப்பெற்றுள்ளது.

புதிதாகப் பணியில் சேர உள்ளவர்களோடு பிரதமர் கலந்துரையாடினார்.

பிரதமரிடம் இருந்து பணிநியமன ஆணையை முதலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரபா பிஸ்வாஸ் என்பவர் பெற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சாப் தேசிய வங்கியில் பணியில் சேருவதற்கான நியமன ஆணையை பிரதமர் வழங்கினார்.  அவரோடு பிரதமர் கலந்துரையாடினார்.  பணி நியமனம் தொடர்பான அனைத்து நடடிவடிக்கைகளும் விரைவாக முடிக்கப்பட்டு பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். கல்வியை தொடர்வீர்களா என்று அவரிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். அவருடைய பணியில் டிஜிட்டல் முறையிலான நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக சுப்ரபா பிஸ்வாஸிடம் பிரதமர் திரு மோடி கேட்டுத் தெரிந்து கொண்டார்.  பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜம்மு & காஷ்மிரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஃபெய்சல் ஷவுகத் ஷா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையை பிரதமரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  அதன் பிறகு பிரதமரோடு கலந்துரையாடிய ஃபெய்சல், தனது குடும்பத்திலிருந்து முதல் முறையாக அரசு வேலையை தான் பெற்றுக் கொண்டதைக் குறிப்பிட்டார். அரசுப்பணி கிடைக்கப் பெற்றதன் தாக்கம் குறித்து பிரதமர் அவரிடம் கேட்டார்.  அதற்கு அவர், எனக்கு அரசுப்பணி கிடைத்திருப்பது எனது நண்பர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தி அவர்களும் அரசுப்பணியில் சேருவதற்கு தயாராகி விட்டனர்.   மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி வலைதளம் பயனுள்ள வகையில் அமைந்தது என்று  ஃபெய்சல் தெரிவித்தார்.  ஃபெய்சல் போன்ற இளைஞர்களின் செயல்பாடுகள் ஜம்மு-காஷ்மீரை புதிய உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் பிரதமர் தனக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் கற்பதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஃபெய்சலை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

குவகாத்தியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் அலுவலராக பணி நியமனத்தை மணிப்பூரைச் சேர்ந்த வாக்னி சாங்க் பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். வடகிழக்குப் பகுதியில் உள்ள சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை என்றும் தெரிவித்துள்ளார். முதல் முறையாக அரசுப்பணி நியமனம் பெற்ற குடும்பம் அவருடைய குடும்பத்திலிருந்து அரசுப்பணியில் சேர்ந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.  அவரிடம் பணிநியமனம் தொடர்பான  தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் அவருக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டதா என்பதை பிரதமர் கேட்டறிந்தார்.  அவ்விதம் இருப்பின் அது குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடம் பிரதமர் கேட்டார்.  தொடர்ந்து கற்பதை நிறுத்தப்போவதில்லை என்பதை இவரும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.  பணி இடங்களில் பெண்களுக்கு பாலியில் ரீதியிலான தொந்தரவுகளுக்கு தீர்வு மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை அறிந்து கொண்டதாக பிரதமரிடம் தெரிவித்தார்.  வடகிழக்குப் பகுதியிலிருந்து வந்து பணிநியமனம் கிடைத்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்,  அப்பகுதியின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்திய கிழக்கு ரயில்வேத் துறையில் இளங்கலை பொறியாளர் பணிநியமனம் பெற்ற பீகாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜு குமார், தான் கடந்து வந்த பாதை பற்றியும் வாழ்க்கையில் மேன்மையான இடத்தை அடைவது தான் தன்னுடைய இலக்கு என்பதையும் பிரதமரிடம் தெரிவித்தார்.  தன்னுடைய குடும்பம்  மற்றும் தன்னுடன் பணியாற்றியவர்களின் ஆதரவு குறித்து நெகிழ்வுடன் பேசினார். அவர் கர்மயோகி பிராரம்ப் பயிற்சி வகுப்பில் 8 நிலைகளை முடித்ததன் விளைவாக நடத்தை விதிமுறைகள் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் பயன்பெற்றதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணித் தேர்வை எழுத போவதாகவும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.  அவருடைய இந்த பயணம் வெற்றிகரமாக அமைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சியாளராக பணிநியமன ஆணையை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணமாலா வம்சி கிருஷ்ணா பிரதமரிடம் பெற்றுக் கொண்டார்.  அவருடைய கடின உழைப்பு மற்றும் அவருடைய பெற்றோர்களை எதிர்நோக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசினார். பணிநியமனம் பெற்றவர் தான் கடந்து வந்த நீண்ட நெடிய பயணம் குறித்தும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியதற்காக பிரதமருக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார். அலைபேசியின் மூலமே ஒருவர் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள முடிந்தது மிகவும் சுலபமாக இருந்தது என்றார். கண்ணமாலா வம்சி கிருஷ்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு மோடி, அவருடைய கல்வி கற்கும் ஆற்றலை தொடர்ந்து வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

எம். பிரபாகரன்

Leave a Reply