சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பார்ஓஎஸ்’ மொபைல் செயல்பாட்டு இயக்குமுறையை தர்மேந்திர பிரதான், அஷ்வினி வைஷ்ணவுடன் இணைந்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தார்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பார்ஓஎஸ்’ மொபைல் செயல்பாட்டு இயக்குமுறையை (மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம்) மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை திரு தர்மேந்திரபிரதான், ரயில்வே தகவல்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவுடன் இணைந்து வெற்றிகரமாக இன்று சோதித்துப்பார்த்தார்.

அப்போது பேசிய திரு பிரதான், வலிமையான, உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தற்சார்பு சார்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பின்  முக்கியப் பயனாளிகளாக நாட்டின் ஏழைமக்கள்  இருப்பார்கள் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் ‘பார்ஓஎஸ்’ முக்கிய முன்னெடுப்பாக உள்ளது என்று தெரிவித்தார். தரவு காப்பிற்கு ‘பார்ஓஎஸ்’ வெற்றிகரமான ஒன்று என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply