ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி மிக சிறிய பரப்பளவு, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி கிராமங்கள் இல்லாத தொகுதியாக உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது.
05.01.2023 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 110713 ஆண் வாக்காளர்களும், 116140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 226898 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் சதவீதம் முழு விபரம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com