மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காது – மூக்கு – தொண்டை – தலை – கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு சென்னையில் இன்று( ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “காது – மூக்கு – தொண்டை – தலை – கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கும் அவருக்குத் துணைநின்று இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அன்பர்கள் அனைவருக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கே.பி.சுகுமார்