இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 முதலாவது சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழுவின் இரண்டு நாள் கூட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் ஆகியோர் சண்டிகரில் இன்று தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர், அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுடன் இந்தியா, படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இவை இரண்டுமே எதிர்கால இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையதாகும் என்றும் கூறினார். டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை உருவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா வகிப்பது நம் அனைத்து குடிமக்களுக்கும் பெருமையான தருணம் என்று அவர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நமக்கான கடமைகள் குறித்து அனைவரும் நல்ல விழிப்புணர்வு பெற்றுள்ளோம். கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் திரு பராஸ், ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது சர்வதேச நிதிக் கட்டமைப்பு இன்று நல்லநிலையில் இருப்பதை உறுதி செய்வது, மேலும் வளர்ச்சியடையச் செய்வது ஆகியவை நமது கடமை என்று கூறினார்.
அத்துடன் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு அதிகபட்ச ஆதரவு அளிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
திவாஹர்