22 மாநிலங்களில் திறந்த வெளி சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் (உள்நாடு) இந்திய உணவுக் கழகத்தின் மின்னணு ஏலத்தின் முதல்நாளில் 8.88 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனையானது.

மத்திய அரசின் தொகுப்பில் உள்ள 25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில் 22 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விற்பனை செய்ய இந்திய உணவுக் கழகம் முன்வந்தது. அதன்படி, திறந்த வெளி சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், (உள்நாடு) மின்னணு ஏலத்தின்  முதல் நாளான 1, பிப்ரவரி 2023 அன்று  8.88 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனையானது.  22 மாநிலங்களில் நடைபெற்ற இந்த மின்னணு ஏலத்தில் 1100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

மின்னணு ஏலம் மூலம் கோதுமை விற்பனை நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் மார்ச் 2-வது வாரம், 2023 வரை நடைபெறும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், மத்திய அரசு ஊழிர்களுக்கான நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் போன்ற கூட்டமைப்புகளுக்காக 3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு இருப்பு வைத்துள்ளது.

2 மாதங்களில் 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளிச் சந்தையில் விநியோகிக் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply