டிஜிட்டல் (மின்னணு) தடயஅறிவியல் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகமும், தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிவுசார் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தத்தில், சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு முதன்மை தலைமை இயக்குநர் சுர்ஜித் புஜபால் மற்றும் தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜே எம் வியாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் அமலாக்கத் துறையினருக்கு தேவைப்படும் புலனாய்வு தகவல்களையும் வழங்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் தடயஅறிவியல் புலனாய்வு சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களை இணைந்து மேற்கொள்வதோடு, ஒருவருக்கொருவர் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்