150-க்கும் அதிகமான சிறுதானிய வகைகளின் விதைகளைப் பாதுகாக்கும் லஹாரி பாயின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

சிறுதானியங்களின் தூதரக மாறியிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் திண்டோரியைச் சேர்ந்த 27 வயது பழங்குடியினப் பெண்ணை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.  இந்தப் பெண் 150-க்கும் அதிகமான சிறுதானிய வகைகளின் விதைகளைப் பாதுகாத்துள்ளார்.

தூர்தர்ஷன் (டிடி) செய்திப் பிரிவால் வெளியிடப்பட்ட ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“சிறுதானியங்கள் மீது பேரார்வம் காட்டுகின்ற லஹாரி பாய் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.  அவரது முயற்சிகள் மேலும் பலரை ஊக்கப்படுத்தும்.”

திவாஹர்

Leave a Reply