ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மும்பையில் நடைபெற்ற பாய்மரப்படகு சாம்பியன் ஷிப் 2023 போட்டிகள் நிறைவடைந்தன.

இந்திய பாய்மரப் படகு சங்கத்தின் சாம்பியன் ஷிப் போட்டிகள் 2023 மும்பையில் கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 3-வது பயிற்சிப் போட்டியாக இது அமைந்தது. இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் இது நடைபெற்றது.

ஒரு வார காலம் நடந்த இந்தப் போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 16 கிளப்கள் சார்பில் 189 பேர் பங்கேற்றனர். முதல் முறையாக இந்த தடவை ஃபார்முலா கைட் போட்டி நடைபெற்றது.

கடலில் நிலவிய மிதமான மற்றும் பலத்த காற்று, படகுப் போட்டியாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மும்பை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் போட்டிகளை கண்டுகளித்தனர்.

இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த ராணுவ பாய்மரப்படகுப் பிரிவைச் சேர்ந்த மாலுமிகள் 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இடத்தைப் பிடித்தனர்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply