குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், லிதுவேனியா, லாவோ, கிரீஸ், கௌதமாலா, எஸ்வாட்டினி ஆகிய நாடுகளின் தூதர்கள் சமர்ப்பித்த நியமனப் பத்திரங்களை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
நியமனப் பத்திரங்களை இன்று வழங்கியவர்கள் வருமாறு:
- திருமதி டயானா மிக்கிவிசியனே, லிதுவேனியா குடியரசுத் தூதர்
- திரு. பவுன்மி வான்மணி, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதர்
- திரு டிமிட்ரியோஸ் ஐயனோவ், கிரீஸ் தூதர்
- திரு உமர் லிசான்ட்ரோ காஸ்டனேடா சோலாரஸ், கௌதமாலா குடியரசுத் தூதர்
- திரு. மென்சி சிபோ ட்லாமினி, எஸ்வாட்டினி கிங்டம் தூதர்
எம்.பிரபாகரன்