இலங்கை இராணுவ விவசாய பண்ணைகளில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் பருவகால காய்கறிகள்!

ஸ்ரீலங்கா இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் இலங்கை முழுவதும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் இலங்கை அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாதங்களுக்கு முன்னர் அந்தந்தப் பண்ணைகளில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் பருவகால காய்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் இலங்கை படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பாங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில மற்றும் இரணைமடு ஆகிய இராணுவப் விவசாயப்பண்ணைகளில் கடந்த சில நாட்களாக நெல் மற்றும் காய்கறிகளை அறுவடை செய்தனர். இதுவரை இராணுவப் பண்ணைகளில் இருந்து 120.3 மெட்ரிக் டன் நெல்லினை இலங்கை படையினர் அறுவடை செய்துள்ளனர்.

2021 ஜனவரி 4 ஆம் தேதி உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்ட இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியானது  தற்போது  இலங்கை முழுவதிலும் உள்ள 19 இராணுவ விவசாயப் பண்ணைகளை நிர்வகித்து வருகின்றது.

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால் நடைப்படையணியில் ஏற்கனவே உள்நாட்டு மற்றும் பொது நெல் வகைகள், கேரட்,  பூசணி, கத்தரி, சோளம், முள்ளங்கி போன்றவற்றை பயிரிடத்தொடங்கியுள்ளது, மேலும் பால்பொருட்கள், கோழி மற்றும் முட்டைகள் பெருமளவில் இராணுவ வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மானிய விலையில் விற்கப்படுகின்றன.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply