சர்வதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி 2023-ஐ குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று (16.02.2023) தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து மட்டும் இந்நிகழ்ச்சியில் பேசப்படாமல், உலகின் சிறந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் நாடு இணைந்து செயல்படுவதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
48 வருடங்களில் முதன் முறையாக இந்தியாவில் சர்வதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெறுவதாகக் கூறிய குடியரசுத் தலைவர், இக்காலக் கட்டத்தில் பொறியியல் தொழில்துறை புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதிக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம். பிரபாகரன்