இந்தியாவில் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பயணத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், அறிவியல் நிர்வாகிகளின் பங்கும் முக்கியமானது: டாக்டர் ஜிதேந்திர சிங்.

மத்திய அறிவியல் தொழில்நுட்பம்,  புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், தனிநபர் குறைகள் தீர்வு, ஓய்வூதியம் அணுசக்தி மற்றும் விண்வெலித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்திய நிர்வாகவியல் பணியாளர்  கல்லூரி சார்பில் அறிவியல் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்சியில் நல்லாட்சிக்கான பயிற்சி மாதிரியையும் தொடங்கிவைத்தார்.

பயிற்சி முகாமில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பருவ நிலை மாறுபாடு, தொற்றுநோய்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதில்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியம் என்றார். எனவே சமூக பாதுகாப்பில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர்    தெரிவித்தார்.

அதேபோல் அறிவியல் தொழில்நுட்பங்களை கையாள்வதில் உள்ள தடைகளை நீக்கவும், அவற்றின் பயன்களை அனுபவிப்பதில் உள்ள சவால்களை முறியடிக்கவும் முனைப்பான நடவடிக்க தேவை, எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், மலிவான விலையில் புதிய கண்டுபிடிப்புகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்ககை எடுக்கவேண்டும் என்றார்.

சோசியலிஸ நாடான இந்தியாவில் மக்களின் வாழ்க்கையை எளிதானதாக மாற்றுவதை முன்னிறுத்திய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்றுக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியில் தொழில்நுட்பங்களின் பயன்கள் சமூகத்தை சென்றடைவதற்கு தொடர்ந்து ஆதவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகளை அரசு  மட்டும் தான் மேற்கொள்ளவேண்டும் என்பது இல்லை, தனியார் நிறுவனங்களும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதுடன், அரசுடன் இணைந்தும் ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இந்தப் பணிகளுக்கு அறிவியல் நிர்வாகிகள் பாலங்களாக திகழ்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனியார் நிறுவனங்களின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்கு அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

திவாஹர்

Leave a Reply