ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாக சரக்குகளை கையாண்டுள்ளதாக இதன் தலைவர் திரு பி.எல். ஹரநாத் தெரிவித்துள்ளார். 2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி வரையிலான காலத்தில் 47.282 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலத்தில் 54.254 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இது 14.75 சதவீத வளர்ச்சி என்பதோடு, தேசிய சராசரியைவிடவும் உயர்வானது என்று அவர் கூறினார்.
2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி வரையிலான காலத்தில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்திலிருந்த கொல்கத்தா துறைமுகம் 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலத்தில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திரவ சமையல் எரிவாயு, தாவர எண்ணெய், இதர திரவப்பொருள்கள், மங்கனீஸ் தாது, இரும்பு மற்றும் எஃகு, பருப்பு வகைகள், சமையல் செய்வதற்கான நிலக்கரி போன்றவை இந்த சாதனைக்கு பங்களிப்பு செய்ததாக திரு ஹரநாத் தெரிவித்தார். 2022-23 இறுதிவாக்கில் இந்தத் துறைமுகம் 65 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக சரக்குகளை ஏற்றும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
எம். பிரபாகரன்