இந்திய உணவுக் கழகம் 3வது மின்னணு ஏலத்தில், நாடு முழுவதும் உள்ள தனது 620 கிடங்குகளிலிருந்து சுமார் 11.72 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விடுவிக்க முன்வந்துள்ளது.
வரும் 22-ந்தேதி நடைபெறவுள்ள மூன்றாவது மின்னணு ஏலத்திற்கு, 17.02.2023 அன்று இரவு 10:00 மணிக்குள் எம் ஜங்ஷனின் இ போர்ட்டலில் பதிவு செய்துள்ள ஏலதாரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். முன்வைப்புத் தொகையை (டேவணித் தொகை) டெபாசிட் செய்வதற்கும் பதிவேற்றுவதற்கும் கடைசி தேதி 21.02.2023 மதியம் 02:30 மணி வரை ஆகும். மூன்றாவது மின்னணு ஏலம் 22.02.2023 அன்று காலை 11:00 மணிக்கு தொடங்கும்.
அரசு நாடு முழுவதும் உள்நாட்டு வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் மூலம் கோதுமை விற்பனைக்கான இருப்பு விலையை இந்தியா குறைத்துள்ளது. இப்போது, அதிகம் விரும்பப்படும் கோதுமையின் இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 2150 ஆகவும், அடுத்த ரக கோதுமை ரூ. 2125 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் ஆட்டா விலையை மேலும் குறைக்க நாடு முழுவதும் குறைந்த சீரான இருப்பு விலையில் கோதுமை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இருப்பு விலைகள் 22 ந்தேதி நாடு முழுவதும் நடைபெறும் இ-ஏல விற்பனைக்கு பொருந்தும்.
நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் குறைக்கும் வகையில், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி, இந்திய உணவுக் கழகம் 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கையிருப்பை மத்திய தொகுப்பில் இருந்து உள்நாட்டு வெளிச் சந்தை விற்பனைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விடுவிக்கிறது
1வது மற்றும் 2வது இ-ஏலத்தின் போது மொத்தமாக 12.98 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் 8.96 லட்சம் மெட்ரிக் டன் ஏற்கனவே ஏலதாரர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, இதன் விளைவாக கோதுமை மற்றும் ஆட்டா விலைகள் குறைந்துள்ளன.
மத்திய அரசின், நாடு முழுவதும் ஒரே மாதிரியான இருப்பு விலையில் குறைப்பு குறித்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு பயனளிக்கும் என்பதுடன், கோதுமை மற்றும் ஆட்டா விலைகளை மேலும் குறைக்கும்.
திவாஹர்