மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத்தின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து சாகர் பரிக்ரமா மூன்றாம் கட்டத்தைத் தொடங்கி வைத்தார். சத்பதி, வசாய், வெர்சோவா ஆகிய இடங்களில் மகாராஷ்டிராவின் கடற்கரையை நோக்கிச் சென்று மும்பை சாசன் தளத்தில் முடிவடையும்.
மீன்வளத் துறை, மீன்வளத்துறை, கால்நடைப் வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் அரசு மீன்வளத் துறை, மீன்வள ஆணையர், மகாராஷ்டிரா அரசு, இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தப் பயணத்தில் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் பிரதிநிதிகள், மீன் விவசாயிகள், தொழில்முனைவோர், பங்குதாரர்கள், தொழில் வல்லுநர்கள், அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
‘சாகர் பரிக்கிரமா’வின் முக்கிய நோக்கங்கள் (i) மீனவர்கள், கடலோர சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதற்கு வசதியாக பல்வேறு மீன்வளம் தொடர்பான திட்டங்கள், அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புவது; (ii) தற்சார்பு இந்தியாவின் உணர்வாக அனைத்து மீனவ மக்கள், மீன் விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடனும் ஒற்றுமையை வெளிப்படுத்துதல்; (iii) நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கடலோர மீனவ சமூகங்களின் வாழ்வாதாரம் (iv) கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடல் மீன்வள வளங்களைப் பயன்படுத்துவதில் சமநிலையை மையமாகக் கொண்டு பொறுப்பான மீன்வளத்தை மேம்படுத்துதல்.
‘சாகர் பரிக்ரமா’வின் முதல் கட்டம், குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது, இது மார்ச் 5, 2022 அன்று மாண்ட்வியில் தொடங்கி மார்ச் 6, 2022 அன்று குஜராத்தின் போர்பந்தரில் முடிவடைந்தது. சாகர் பரிக்ரமா கட்டம் -II , 2022 செப்டம்பர் 22 அன்று மங்ரோலில் இருந்து வெராவல் வரை தொடங்கி, 23 செப்டம்பர் 2022 அன்று முல்-துவாரகாவிலிருந்து மத்வாட் வரையிலான பயணம் முடிந்தது. மூன்றாம் கட்ட ‘சாகர் பரிக்ரமா’ நிகழ்ச்சி இன்று தொடங்கி 21ந்தேதி மும்பை சாசன் தளத்தில் முடிவடைகிறது.
குஜராத், டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் இருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட கடல் வழியில், அனைத்து கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் சாகர் பரிக்ரமா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
திவாஹர்