வர்த்தக ரீதியிலான சுரங்கங்களுக்கான 6வது கட்ட மற்றும் 5வது கட்டத்தின் 2வது பகுதி ஏலத்தை நிலக்கரி அமைச்சகம் 2022 நவம்பர் 3ம் தேதி தொடங்கியது. இதற்கு இந்தத் தொழில்துறையினர் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருந்ததுடன் 36 சுரங்கங்களுக்கு 96 ஏலங்கள் கோரப்பட்டன. இதில் பலர் முதல்முறையாக ஏலத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கத் துறையின் மீது ஆக்கப்பூர்வமான கருத்து உள்ளதை ஏலதாரர்கள் மத்தியில் நிலவிய இந்த ஆர்வம் எதிரொலித்தது.
தொழில்நுட்ப மதிப்பீடுகள் நிறைவடைந்த பிறகு 27 சுரங்கங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஏலங்கள் கோரப்பட்டிருந்தன. இதையடுத்து 2023 பிப்ரவரி 27 முதல் மீண்டும் ஏலம் விடும் பணி நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான மாதிரி ஏலம் பிப்ரவரி 24ம் தேதி நடத்தப்படவுள்ளது.
எம்.பிரபாகரன்