கடலோரப் பாதுகாப்பு: தகவல் தொகுப்பு மையம்- இந்தியப் பெருங்கடல் பகுதி, பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு தகவல் தொகுப்பு மையம் – இந்தியப் பெருங்கடல் பகுதி, செஷல்சில் உள்ள பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம்,  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் விளைவாக இந்த இரண்டு மையங்களுக்கு இடையே கடலோரப்பகுதிகள் குறித்த விழிப்புணர்வு, தகவல் பகிர்தல் மற்றும் துறை சார்ந்த நிபுணர் பங்களிப்பின் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்திய கப்பற்படையின் கீழ் இயங்கும் இந்தியப் பெருங்கடல் பகுதி, பிராந்திய கூட்டு நடவடிக்கை மையத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குருகிராமில் தொடங்கியது. இந்தியப் பெருங்கடல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்பின் பணிகளை பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம்  மற்றும் இது தொடர்பாக அதிகாரம்  பெற்ற  7 நாடுகளின் தேசிய மையங்கள் ஆகியவைகள் இணைந்து  செயலாற்றும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இரண்டு மையங்களின் இயக்குனர்கள் ஒருமித்தக் குரலில் கடலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply