ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1292.65 கோடி மதிப்பீட்டில் 32 கி.மீ தொலைவிற்கான ஆறு வழி பசுமைச் சாலைக்கு நிதின் கட்கரி ஒப்புதல்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி பாரத்மாலா பரியோஜானா – நாட்டின் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான விரிவான  ஒரு செயல் திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1292.65 கோடி மதிப்பீட்டில் சந்திரசேகரபுரத்திலிருந்து போலாவரம் வரையிலான  பெங்களூரு-விஜயவாடா பொருளாதார 32 கி.மீ தொலைவிற்கான ஆறு வழி பசுமை சாலைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

கோடிகொண்டா சோதனைச் சாவடி முதல் முப்பாவரம் வரையிலான 342.5 கி.மீ தொலைவிற்கு பசுமை வழிச் சாலையாக மாற்றம் பெறுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் 14 தொகுப்புகளாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்று கூறினார்.

திவாஹர்

Leave a Reply