காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்தியப் பகுதிக்கான 19-வது ஆண்டு 3-வது மண்டல மாநாட்டை சிக்கிமின் காங்க்டாக்கில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நேற்று (23.02.2023) தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஓம் பிர்லா, விவாதங்களும், ஆலோசனைகளும் ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் என்று கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவைகள், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே உள்ளன என்று குறிப்பிட்டார். இதில், ஆக்கப்பூர்வமான முறையில் தடைகள் ஏதுமின்றி நடவடிக்கைகள் நடைபெறும் போது தான் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொதுமக்களுக்கு எளிதில் கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். மக்களுடனான தொடர்புக்கு சமூக வலைதளங்கள் மிகப் பெரிய ஊடகமாக உருவெடுத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்தியப்பகுதியின் 3-வது மண்டலம் முக்கியமான தளம் என்று கூறிய அவர், இதில் வடகிழக்குப் பகுதியில் மக்கள் பிரதிநிதிகளுடன் விவாதங்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம்சிங் தமங், மாநிலங்களவைத் துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எம்.பிரபாகரன்