இந்திய கடற்படையின் வருடாந்திர மறுசீரமைப்பு மாநாடு 23 (ஏஆர்சி-23) மற்றும் வருடாந்திர உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு 23.

இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகமான விசாகபட்டணத்தில்  பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில், வருடாந்திர மறுசீரமைப்பு மாநாடு 23  மற்றும் வருடாந்திர உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு 23   நடத்தப்பட்டது. மாநாடு வைஸ் அட்மிரல்  சந்தீப் நைதானி தலைமையில் நடைபெற்றது. மறுசீரமைப்புத் திட்டங்கள், இந்திய கடற்படையின் கப்பல்கள்/நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகள் , இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டன.

கடற்படை தளங்களின் இயந்திரங்கள்,  ஆயுதங்கள் மற்றும் சென்சார்களின் பராமரிப்பு, வாழ்வாதார அம்சங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மாநாட்டின்  தலைவர் பாராட்டினார். தொழில்நுட்ப சகோதரத்துவம் எதிர்கொள்ளும் சவால்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பராமரிப்புக் காலங்களைக் குறைப்பதன் மூலம் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் மேம்பட்ட செயல்திறனை உறுதிசெய்ய, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், குவாண்டம் கம்ப்யூட்டேஷன், ஐஓடிக்கான 5ஜி, ரோபாட்டிக்ஸ் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சியில் இந்தியக் கடற்படையின் வளர்ந்து வரும் பங்கையும், தளத் துறைமுகத்திலிருந்து கப்பல்களை நீட்டித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏஐஐசி  கூட்டத்தில், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கடல் உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து  மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்திய கடற்படையில் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பு திட்டங்களின் வேகம் குறித்து  திருப்தி தெரிவிக்கப்பட்டது.  மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால தளங்களுக்கு கூடுதல்  இடத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கடல் உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த சந்திப்பின் போது ஆய்வு செய்யப்பட்டன.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்த மாநாட்டின் போது உள்நாட்டுமயமாக்கல் குறித்த பிரத்யேக அமர்வும் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் பல்வேறு  அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply