ஏப்ரல் 2022- பிப்ரவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 784.41 மில்லியன் டன்னை எட்டி முந்தைய ஆண்டு உற்பத்தியை விட அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 2022- பிப்ரவரி 2023 காலகட்டத்தில் 784.41 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.  கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், இது 15.10 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 681.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிதியாண்டில் கோல் இந்தியா நிறுவனம் பிப்ரவரி மாதம் வரை 619.70 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.  கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 542.38 மில்லியன் டன் நிலக்கரியை கோல் இந்தியா உற்பத்தி செய்திருந்தது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் முந்தைய நிதியாண்டை விட கோல் இந்தியா நிறுவனம் 14.26 சதவீதம் அதிகமாக நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

நிலக்கரி அமைச்சகம் நிலக்கரியைப் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்து எடுத்துச் செல்ல பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ், ரயில் போக்குவரத்து இணைப்பு வசதிகளை அதிகளவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 793.86 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது.  கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 740.96 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply