2023 பிப்ரவரியில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,49,577 கோடி; கடந்த ஆண்டு இதே மாத்ததின் ஜிஎஸ்டி வருவாயைவிட இது 12% அதிகமாகும்.

2023 பிப்ரவரி மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ 1,49,577 கோடியாகும் இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ 27,662 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ 34,915. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 75,069 கோடி (சரக்குகளிள் இறக்குமதிக்காக வசூலிக்கப்பட்ட ரூ 35,689 கோடி உட்பட) செஸ் வரி ரூ 11,931 கோடி (சரக்குகளிள் இறக்குமதிக்காக வசூலிக்கப்பட்ட ரூ.792 கோடி உட்பட)

வழக்கமான பகிர்வின்படி ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி யிலிருந்து ரூ 34,770 கோடி சிஜிஎஸ்டி க்கும் ரூ. 29,054 கோடி எஸ்ஜிஎஸ்டி க்கும் அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது. வழக்கமான பகிர்வுக்குபின் 2023 பிப்ரவரி மாதத்தில் சிஜிஎஸ்டி மூலம் மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ 62,432 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ 63,969 கோடியாகவும் உள்ளது மேலும் 2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ 16,982 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது

2023 பிப்ரவரி மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ரூ 1,33,026 கோடி என்பதைவிட 12% அதிகமாகும் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் அதிகபட்சமாக செஸ்வரி வசூல் ரூ 11,931 கோடியாக உள்ளது. பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் ஒப்பீட்டு அளவில் வருவாய் வசூல் குறைவாக இருக்கும்

தமிழ்நாட்டில் 2022 பிப்ரவரி மாதத்தில் ரூ 7,393 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வரி வசூல் 2023 பிப்ரவரியில் 19% வளர்ச்சியடைந்து ரூ 8,774 கோடியாக உள்ளது. 

திவாஹர்

Leave a Reply