மத்திய அரசின் தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளின் கீழ் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயல்பாடுகளை தேசிய அனல்மின் கழகமான என்.டி.பி.சி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் (என்.ஜி.இ.எல்) கீழ் கொண்டு வருவது சம்பந்தமான பரிவர்த்தனைகளை பிப்ரவரி 28, 2023 அன்று தேசிய அனல்மின் கழகம் (என்.டி.பி.சி) முழுமையாக நிறைவேற்றியது. இதன் மூலம் கடந்த ஏப்ரல் 7, 2022 அன்று உருவாக்கப்பட்ட துணை நிறுவனமான என்.ஜி.இ.எல் வசம் என்.டி.பி.சி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சம்பந்தமான சொத்துக்களும் உடமைகளும் பரிமாற்றம் செய்யப்பட்டன.
வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தம் வாயிலாக 15 சொத்துக்களும், பங்கு விற்பனை ஒப்பந்தம் வாயிலாக என்.டி.பி.சி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.டி.பி.சி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான என் ஆர் இ எல்-ன் 100% பங்குகளும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நிதியாண்டு 32க்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்கும் இலக்கை அடைய அதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக குழுமத்தின் பெரு நிறுவன வர்த்தகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா