ஜார்கண்டின் சரைகேளாவில் 2023 மார்ச் 4ம் தேதி, பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமை மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, ஜார்க்கண்ட் முதல் அமைச்சர் தொடங்கி வைக்கின்றனர். காசி சாகு கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
தனியார் பங்களிப்புக்கு உதாரணமாக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின இளைஞர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியை வழங்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சரைகேளா, சாய்பாஸா, சிம்டெகா ஆகிய பகுதிகளில் நடத்திய இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு தமிழகத்தின் ஓசூரில் இயங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கியது
எஸ்.சதிஸ் சர்மா