கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா!-பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்றது.

இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் தலைமையில் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் 2023 மார்ச் 03 மற்றும் 04 தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பலத்தப்பாதுகாப்புடன் அனைத்து அடிப்படை வசதிகளையும் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் நெடுந்தீவு பிராந்திய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, சுகாதார வசதிகள், தற்காலிக வீதிகள் மற்றும் இறங்குதுறைகள், மின்சார வசதிகள், ஜீவாதார வசதிகள், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளுக்கான மீட்புக் குழுக்கள், சிகிச்சைக்காக மருத்துவ ஊழியர்களைக் கொண்ட மருத்துவ மையம் என்பன இலங்கை கடற்படையால் நிருவப்பட்டு இருந்தது.

இந்த பெருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை அப்போதைய பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் சட்ட விரோதமாக இலங்கைக்கு தாரைவார்த்ததின் விளைவாக, கச்சத்தீவில் திருவிழாவை முன்னின்று நடத்த வேண்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களும், பக்தர்களும், பொதுமக்களும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு அகதிகளை போல சென்று வரவேண்டிய அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply