மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் உள்ள காட்கி கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பை உறுதி செய்வதற்கான சுயஉதவிக்குழு பெண்களின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கி கிராமத்தைச் சேர்ந்த சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பை உறுதி செய்வதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார். இது நாடு முழுவதுக்கும் முன்னுதாரணம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் திரு.பிரஹ்லாத் சிங் படேலின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர், “புர்ஹான்பூரின் பெண்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி  நம் நாட்டிற்கே ஒரு எடுத்துக்காட்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply