மகப்பேறு காலத்தில் நீரிழிவு நோயைத் தடுப்பது இந்தியாவின் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு அடித்தளமாகும் என்று மத்திய அமைச்சரும் பிரபல நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
மகப்பேறு காலத்தில் நீரிழிவு நோய் குறித்த ஆய்வுக்குழுவின் ஆண்டு கருத்தரங்கில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட டாக்டர் ஜித்தேந்திர சிங், ” இந்தியாவில் டைப்-டு நீரிழிவு நோய் மிக அதிக அளவில் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உலக நீரிழிவு நோய் தலைநகராக இந்தியா உருவாகியுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு மகப்பேறு காலங்களில் பெண்களை நீரிழிவு நோய் தாக்கினால் அடுத்த தலைமுறையினரையும் டைப்-டு நீரிழிவு நோய் தாக்கி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்” என்றார்.
மகப்பேறு காலத்தில் பெண்களை தாக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் தனது வாழ்நாளை டாக்டர் சேஷய்யா அர்ப்பணித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அடுத்த 25 ஆண்டு காலகட்டத்தில் சுதந்திரப் பெருவிழாவின் அமிர்தகாலத்தில் இளைய சமுதயாத்தினரின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்விற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் விளைவாக உலக அரங்கில் இந்தியா முன்னணி வகிக்கும் என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் “டிஜிட்டல் சுகாதார இயக்கம்” குறித்து பேசியிருந்தார். அதனை மேற்கோள் காட்டிய டாக்டர் ஜித்தேந்திர சிங், மக்களை கொவிட் போன்ற பெருந்தொற்று நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து பல நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொவிட் பெருந்தொற்றை எதிர்கொண்டு சுகாதாரத்தை மேம்படுத்த முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசு உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சதிஸ் சர்மா