மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தோடாவில் NHIDCL, NHPC மற்றும் GREF ஆகியவற்றின் செயல்பாட்டின் கீழ் உள்ள பெரிய திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கினார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு பெரிய திட்டங்களில் வேலை ஒதுக்குவது செய்வது தொடர்பான உள்ளூர் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்ற டாக்டர் சிங், NHPC மற்றும் NHIDCL-யின் கீழ் உள்ள அனைத்து அரசுத் திட்டங்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை தருவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு வழங்கும் அனைத்து திட்டங்களின் பலன்களையும் தகுதியானவர்களுக்கும், வரிசையில் நிற்கும் கடைசி நபருக்கும் கிடைக்கச் செய்வதே மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசின் முயற்சி என்று அமைச்சர் மீண்டும் குறிப்பிட்டார்.
நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்களின் முயற்சிகளை இரு மடங்காக்குதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஜம்மு – காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவதில் பொதுமக்கள் மற்றும் அரசின் எதிர்பார்ப்புகளை அடைய ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டுமென அமைச்சர் சிங் கேட்டுக் கொண்டார்.
எஸ்.சதிஸ் சர்மா