லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சிபெற்ற மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.

லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் 124-வது உள்ளீட்டு பயிற்சியில் பங்கேற்ற குடிமைப்பணி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், பதவி உயர்வுடன் இந்திய நிர்வாகப் பணியில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். இவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்கள் என அவர் கூறினார்.  இந்த  ஆண்டுகளில் அவர்கள் ஏராளமான சவால்களை சந்தித்து, அதற்கு மிகக்கடுமையான முடிவுகளை எடுத்திருக்கக்கூடும் என முதலில் நாடு, மக்கள் என்ற உணர்வுடன் அவர்கள் பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஐஏஎஸ் அதிகாரிகளாக அவர்கள் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்பு, உத்வேகம் ஆகிய கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பல நேரங்களில் ஏற்கனவே இருக்கும் நிலையில் பராமரிக்கும் போக்கு காணப்படுவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

அது எளிதானதாகவோ அல்லது நம்மைச் சுற்றியுள்ள எப்போதும் மாறிவரும் சூழ்நிலையிலிருந்து எழும் மக்களின் பிரச்சனைகளை அலட்சியம் செய்வதாகவோ அமையும். எனவே குடிமைப்பணி அதிகாரிகள், சிறந்த மாற்றம் நல்லது என்ற மனப்போக்குடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  

 புதுமை விரும்புதல், தீவிர செயல்பாடு, பணிவு, தொழில் திறன், ஆற்றல், வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம் சார்ந்த ஆக்கப்பூர்வமான எண்ணம் கொண்ட குடிமைப்பணி அதிகாரிகளே நாட்டுக்குத் தேவை என்று குடியரசுத் தலைவர் கூறினார்.  இத்தகைய ஆளுமை பண்புகளைக் கொண்ட நிர்வாகத் தலைவர்கள்  நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த சேவைப் புரிவார்கள் என்று அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply