பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் என்பது மக்கள் மற்றும் சரக்குகளின் தடையற்ற போக்குவரத்திற்காக உள்கட்டமைப்பு வசதியற்ற தன்மையை நீக்கும் வகையில் பலதரப்பட்ட போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து திறன் ஆகியவற்றை மேம்படுத்த சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையாக உள்ளது.
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் துறைமுகங்கள், சரக்கு கையாளும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மண்டலங்களின் பலதரப்பட்ட போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. பிரதமரின் விரைவு சக்தி திட்ட முன்னெடுப்பின் கீழ் துறைமுகங்கள், கப்பல் சரக்கேற்றும் மையங்கள் தொடர்புடைய 101 திட்டங்கள் இதுவரை கண்டறியப்பட்டன. இதன் மதிப்பு ரூ.60,872 கோடியாகும். இவற்றில் ரூ.4,423 கோடி மதிப்புடைய 13 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 178 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகவலை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
திவாஹர்