மதிப்புமிக்க 95வது அகாடமி விருதுகளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டிய தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் குழுவினருக்கு மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்த ஆஸ்கர் வெற்றி இந்திய சினிமா தயாரிப்பிற்கு புதிய அங்கீகாரத்தை அளிப்பதாக அவர் கூறினார்.
ஆஸ்கர் விருது வென்றது நம்முடைய உலகளாவிய முன்னேற்றம் மற்றும் பங்களிப்பிற்கான மற்றுமொரு அடையாளம் என்று திரு. தன்கர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்