சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டால் அது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார். புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கிசான் தக் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் அதன் இணையதளத்தை தொடங்கி வைத்தபின் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். வேளாண் சமுதாயத்தில் 85% பேர் சிறு விவசாயிகள் என்றும், குறைவான தனியார் முதலீட்டால் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மை திகழ்வதாகவும், இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக வேளாண் சூழல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2047ம் ஆண்டிற்குள் அமிர்த காலத்தின் போது 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதில் வேளாண்துறை தொடர்ந்து முக்கியப் பங்களிப்புச் செய்யும் என்று கூறினார்.
சிறு விவசாயிகளின் பொருளாதாரத் திறனை மேம்படுத்த ரூ.6,865 கோடி மதிப்பில் 10,000 வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்பை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திரு. தோமர் குறிப்பிட்டார்.
திவாஹர்