நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பை மத்திய மின்சார ஆணையம் கண்காணித்து வருகிறது. 05.03.2023ன் படி அனல்மின் நிலையங்களில் 34 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் இருந்தது. இது மின் உற்பத்தி செய்ய 12 நாட்களுக்கு போதுமானது. இது மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள நிலக்கரி இருப்பு விதிகளில் சுமார் 50% ஆகும்.
இந்தக் கோடை காலத்தில் 230 ஜிகா வாட் மின்சாரம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கோடைகாலத்தின் மின் தேவையை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளையும் மின்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இத்தகவலை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
திவாஹர்